மண்ணின் குரல்: ஜூலை 2019 -தமிழியின் (தமிழ்பிராமி) பழமை குறித்து டாக்டர்.க.ராஜன்

வணக்கம்.

சமஸ்கிருதம் தோன்றுவதற்கு முன்னரே தமிழி எழுத்துக்கள் வழக்கில் இருந்தமையைத் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் வெளிப்படுத்துகின்றன. அசோகர் கல்வெட்டுக்கள் பிராகிருத மொழியில் அமைந்தவை. இவை அசோகன் பிராமி எழுத்துருக்களால் எழுதப்பட்டவை. இவற்றின் காலம் கி.மு.3. அசோகன் பிராமியிலிருந்து தான் தமிழ் பிராமி (தமிழி) எழுத்துக்கள் உருவாகின என்ற ஒரு கருத்து பொதுவாக உள்ளது.  இப்பேட்டியில் அதனை மறுக்கின்றார் தொல்லியல் ஆய்வறிஞர் டாக்டர்.க.ராஜன்.  
தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்களை அறிவியல் ரீதியாக ஆராயும் போது தமிழி எழுத்துக்கள் கி.மு.6க்கு முற்பட்டதாக இருப்பதையும்  மக்கள் மொழியாக தமிழி வழக்கில் இருந்தமையையும்  காண்கின்றோம்.   

பேட்டியைக் காண https://youtu.be/_wLCBBR9__U

இப்பேட்டியை நமக்காக வழங்கிய பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வறிஞர் டாக்டர்.க.ராஜன் அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.  

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *