தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுச் சுற்றுலா
தமிழ் மரபு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் வருகின்ற அக்டோபர் மாதம் 5 &6 இரண்டு நாட்கள் தூத்துக்குடி மற்றும் நெல்லை வரலாற்றுச் சுற்றுலா. கல்லூரி மாணவர்களுக்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அறிவிப்பில் இருக்கும் பகுதிகளோடு மேலும் பண்டைய பாண்டியர் தலைநகர் கொற்கை, சாயர்புரத்தில் கைத்தறி நெசவு ஆகியவையும் இந்தப் பயணத்தில் அடங்கும்.
மேலதிக விபரங்களுக்கும், தங்குமிடம், தூரத்திலிருந்து பயணிப்போருக்கான ஆலோசனை ஆகியவற்றிற்கு கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்க!
