ஐரோப்பாவில் நிறுவப்பட உள்ள திருவள்ளுவர் சிலை வழியனுப்பும் நிகழ்வு

நேற்று (நவம்பர் 1, 2019) தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நமது திருவள்ளுவர் சிலைகளை நாம் வைத்து தமிழக தொல்லியல் துறை மற்றும் தமிழ வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு  மாஃபா பாண்டியராஜன் அவர்களால் வழியனுப்பும் விழா நிகழ்ந்தது.  அமைச்சர் அவர்களின் அனைத்து செயலாளர்களும் நமது குழுவினருக்கு எல்லா வகையிலும் உதவினார்கள். 

நமது குழுவினர் 14 பேர் உடன் இருந்தோம்.  நமது குழுவினர் ஒவ்வொருவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் இந்த நிகழ்வில் செயல்பட்டு எனக்குத் துணையாக நின்றனர். மாபெரும் இப்பணியைச் செய்வது தனி மனித காரியம் அல்ல. குழுவினரின் ஒத்துழைப்பும் உழைப்பும் முழுமையாக இருந்தால்  தான் இது சாதிக்க முடியும்.                       

40 கிலோ எடை கொண்ட திருவள்ளுவர் சிலையை முதல் நாள் இரவு மகாபலிபுரம் வரை பயணம் செய்து கொண்டு வந்து சேர்த்தார் கதிரவன்.                       

திருப்பூர் மணிவண்ணன் நேற்று அதிகாலையே வந்து விட்டார்.  செயலகத்தில் அங்கும் இங்கும் அலைந்து தேவையான அனைத்து காரியங்களையும் முன்னின்று பார்த்துக் கொண்டார்.                     

க்ரிஷ் 40 கிலோ எடையுள்ள சிலையை தன் தோளில் சுமந்து தலைமைச் செயலகத்தின் படிகள் ஏற்றிக் கொண்டு வந்து சேர்த்தார்.                        

புஷ்பா கால்ட்வெல் அவர்கள் சிலையை அலங்கரிக்க மிக அழகிய மலர் மாலையும் மலர்களும் கொண்டு வந்திருந்தார். அவரது தங்கை கணவர் நமது முழு நிகழ்வினையும் புகைப்படங்களும் காணொளிகளும் செய்து உதவினார்.

தம்பி உதயா திருப்பூர் மணிவண்ணனுடன் இணைந்து எல்லா காரியங்களையும் ஓடியாடி பார்த்துக் கொண்டார்.                     

டாக்டர்.பத்மாவதி, டாக்டர்.மார்க்சிய காந்தி இருவரும் சிற்பம் பற்றி ஆராய்ந்து விளக்கியதோடு வந்திருந்த முக்கியத்துறை சார் வல்லுநர்களுடன் பேசி விளக்கமளித்தனர்.                       

அகிலா செழியன் தேவையான உதவிகளைச் செய்து நிகழ்ச்சியில் பக்க பலமாக இருந்தார்.

குமரகுருபரன், சௌந்தரராஜன் இருவரும்  வந்திருந்தோரிடம் பேசி வரவேற்றனர்.                       

தொல்லியல் துறை இயக்குநர் திரு.உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களும் அமைச்சர் கேட்ட கேள்விகளுக்கு நல்ல பதிலளித்து விளக்கம் வழங்கியது நமது முயற்சிக்கு மேலும் வலு சேர்த்தது.         

சிலைகளில் ஒன்றிற்கான தயாரிப்பு செலவை நன்கொடை  வழங்கிய திரு.பாலச்சந்திரன் இ.ஆ.ப. (ஓய்வு) டெல்லியிலிருந்தாலும் அவரது வாழ்த்துகள் உடன் இருந்தன. 

சிலைகளில் ஒன்றின் பாதிச் செலவை  என்னுடன் பகிர்ந்து ஏற்றுக் கொண்டதோடு நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு, ஃப்ளையர் தயாரிப்பு, மொழிபெயர்ப்பு நூல் வடிவமைப்பு, சிலைகள் தயாரிப்பு மேற்பார்வை, ஜெர்மனி வருவோருக்கான பயண ஏற்பாடுகள் கவனிப்பு, நேற்று அமைச்சருக்கான விளக்க உரை தயாரிப்பு  எனப் பல பணிகளில் உதவிக் கொண்டிருக்கின்றார் திரு.கௌதம சன்னா                        

ஃளையர் ப்ரிண்டிங் பணிகள், இந்தத் திருவள்ளுவர் சிலை தொடர்பான பல பணிகள், எல்லாவிதமான அவசர செயல்பாடுகளைக் கவனித்தல் என முழு மூச்சுடன் இரவு பகல் பாராது இயங்கிக் கொண்டிருக்கின்றார் கதிரவன். அவருக்குத் துணையாகச் செழியனும்.                       

சிலைகள் உருவாக்கப் பணி மேற்பார்வை, பின்னணியில் பல்வேறு வகையில் தேவையான அனைத்து உதவிகள், தக்க சமயத்தில் தக்க ஆலோசனை,  “Making of Thiruvalluvar in Germany video”  பணிகள் எனத் தொடர்ந்து இப்பணியில் இருக்கின்றார் திரு.காந்தி. 

திருவள்ளுவர் சிலை வைப்பது தொடர்பான நமது முயற்சிக்கு ரூ 7000/- நன்கொடை வழங்கியிருக்கின்றார் அமெரிக்க நண்பர் திரு.வெங்கடேஷ்.                        

தொலைபேசி வழியாகவும், தூரத்திலிருந்தும் பல்வேறு வகையில் நண்பர்கள் தக்க பல ஆலோசனைகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.                       

உங்கள் அனைவரின் ஆசியுடன் இந்த நல்ல நோக்கம் மிகச் சிறப்பாக நடந்தேறும் என்ற நம்பிக்கை எனக்கு மனம் முழுதும் இருக்கின்றது.                       

இன்று பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.

a.jpeg

க்ரிஷ் திருவள்ளுவரை ஏந்திச் செல்கின்றார்… உடன் கதிரவன், மணிவண்ணன்

b.jpeg

 மணிவண்ணனும் க்ரிஷும் சில்லைகளை எடுத்து வைக்கின்றனர். 
 சன்னா அறிக்கை தயாரித்துக் கொண்டிருக்கின்றார்.

c.jpeg

நிகழ்ச்சி தொடங்கும் முன் – நமது குழுவினர் சிலையோடு எடுத்துக் கொண்ட குழு  புகைப்படம்

நேற்றைய நிகழ்ச்சியை மிகுந்த ஈடுபாட்டுடன் முன்னின்று நடத்திக் கொடுத்தார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள்.  நமது நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என அவர் எடுத்துக் கொண்ட முயற்சி மிக அதிகம்.  அதுமட்டுமன்றி அமைச்சரின் செயலாளர்கள் அனைவருமே இந்த நிகழ்ச்சிக்கு நம்முடன் உடன் இருந்து ஒத்துழைப்பு நல்கி நமது குழுவில் ஒருவர் போலக் கலந்து கொண்டது மிகுந்த சிறப்புக்குறியது. இறுதி வரை நமக்கு  உடனிருந்த நான்கு செயலருக்கும் ஏனைய ஊழியருக்கும் நமது நன்றி மலர்கள். 

d.jpeg
e.jpeg
f.jpeg

இந்தத் திருவள்ளுவர் சிலை தொடர்பாக அடுத்து வரும் நாட்களில் ஜெர்மனி குழுவினர் ஏராளமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.  அத்தோடு நன்கொடைகள் பெறுதல், அழைப்பிதழ் தயாரிப்பு, நிகழ்ச்சி தயாரிப்பு என பணிகள் பல உள்ளன.                       

ஐரோப்பாவில் (இங்கிலாந்து தவிர்த்த)  வைக்கப்படும் முதல்  திருவள்ளுவர் சிலை என்பதோடு ஐம்பொன் சிலைகள்  என்ற கூடுதல்  சிறப்பினையும் நமது முயற்சி  பெறுகின்றது. அதற்காக  நாம் எடுக்கும் இம்முயற்சி வெற்றி பெற உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் ஒத்துழைப்பும் ,உழைப்பும் தேவை.  

  தினமலர் நாளிதழ் செய்தி: https://www.dinamalar.com/news_detail.asp?id=2401872         

பாலிமர் தொலைக்காட்சி செய்தி:  https://youtu.be/1eqI2-nxbhk       

நியூஸ் ஜெ தமிழ் தொலைக்காட்சி செய்தி:   https://youtu.be/53Aq7IkBetE

1.jpeg

தினமலரில் செய்தி…

2.jpeg

இந்து நாளிதழில் செய்தி …

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *