பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியுடன் தமிழ் மரபு அறக்கட்டளை இணைந்து நடத்தும் மூன்று நாள் இணையவழி கருத்தரங்கம் ஜூன் மாதம் 1-3ம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஜூன் 1: மாலை 5க்குத் தொடக்க விழா + உரை:டாக்டர்.சுபாஷிணி (ஜெர்மனி)
ஜூன் 2: டாக்டர்.அரசு செல்லையா (மேரிலாந்து, அமெரிக்கா)
ஜூன் 3: பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் (மதுரை, தமிழகம்)
—–

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறையும் ஜெர்மனி, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பும் இணைந்து நடத்தும்
இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கம்
நம் கல்லூரித் தமிழ்த் துறையும் ஜெர்மனி தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து ஜீன் 1,2,3 ஆகிய மூன்று நாட்கள் இணைய வழி பன்னாட்டுக் கருத்தரங்கினை நடத்துகின்றன.
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி அவர்களின் தலைமையில் கல்லூரி முதல்வர் டாக்டர் மு. முஹம்மது சாதிக் அவர்களின் வாழ்த்துரையோடு ஜூம் செயலியில் ஜூன் 1 மாலை 5.00 (இந்திய நேரம்) மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது.
ஜெர்மனி தமிழ் மரபு அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் க. சுபாஷினி அவர்கள் பன்னாட்டு அறிவுக் கருவூலங்கள் தமிழகம் மற்றும் ஐரோப்பா ஒப்பீடு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்கள்.

இரண்டாம் நாள்
………………………..
ஜூன் 2 செவ்வாய்க்கிழமை இரவு 8 முதல் 9 மணி வரை இரண்டாம் நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது.
அமெரிக்கா, மேரிலாந்து, பால்டிமோர் மேரிலாந்து பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் அரசு செல்லையா அவர்கள் ஆவது அறிவோம் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
பேரா. ஆ.சிவசுப்பிரமணியன் சிறப்புரை
…………………………………..
மூன்றாம் நாள்
…………………………………..
மூன்றாம் நாள் நிகழ்ச்சி முகநூல் நேரலையில் facebook live தமிழகத்தின் புகழ்பெற்ற சமூகவியல், நாட்டுப்புறவியல், பண்பாட்டியல் ஆய்வறிஞர் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் காலை 10-11 வரை என்னை எழுதத் தூண்டிய கள ஆய்வு அனுபவங்கள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்கள்.
மூன்று தினங்களும் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் மின்னஞ்சலில் வழங்கப்படும். பங்கேற்க விரும்பும் ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள்
முனைவர் ச.மகாதேவன்
கலைப்புல முதன்மையர் மற்றும் தமிழ்த் துறைத் தலைவர்
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011 அவர்களின். புலன எண்ணில் 29.5.2020 நாளுக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
9952140275 கட்டணம் ஏதுமில்லை. 300 பங்கேற்பாளர்களுக்கு மேல் முன்பதிவுகள் இருந்தால் you tube மூலமாக ஆர்வலர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
என்று இக் கருத்தரங்கத் தலைவர் டாக்டர் மு.முஹம்மது சாதிக் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
குறித்த நேரத்தில் கருத்தரங்கு தொடங்கும். பங்கேற்போருக்கு zoom செயலியின் நுழைவிசைவுக் கடவுச் சொல் வழங்கப்படும். நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடத்திற்கு முன் பங்கேற்பாளர்கள் zoom செயலிக்குள் வந்துவிட வேண்டும்.
நிகழ்ச்சி Tamil Heritage Foundation முகநூல் பக்கத்திலும் நிகழ்ச்சிப் பதிவு THF இணையதளத்தின் youtube பக்கத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.
தொழில்நுட்ப உதவிகளைக் கல்லூரியின் கணினித் துறைப் பேராசிரியர் திரு.இப்ராஹிம் அவர்களும் தமிழ் மரபு அறக்கட்டளையின் திரு. விவேகா அவர்களும் மேற்கொள்கிறார்கள். – சௌந்தர மகாதேவன்