
இளைஞர்கள் மத்தியில் தாய்மொழியில் பெயர் சூட்டல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி இது ஒரு தொடர் நிகழ்வாக பல்வேறு குழுக்களிலும் முன்னெடுக்கப்பட்டு நம்மாலான தாக்கத்தைத் தமிழ் நண்பர்கள் மத்தியில் (ஒரு சிலரிடமாவது) ஏற்படுத்துவதே இதன் மைய நோக்கம்.
மேலும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல் தொகுப்புடன் சுவையான பெயர், பெயர் சூட்டல் தொடர்பான அனுபவங்களைப்பகிர்ந்த தமிழ் உள்ளங்களைப் பாராட்டும் வகையில் விரைவில் மீண்டுமொரு நிகழ்வில் தங்கள் அனைவரையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தங்கள் அனுபவப் பகிர்வு சிறந்ததாக தேர்வு செய்யப்படக்கூடும் அல்லது பிறருக்குப் பயனளிக்கக்கூடும். ஆகவே தகவல் தொகுப்பில் இணைவீர். தங்கள் அனுபவப் பகிர்வைத் தாரீர்!
https://forms.gle/ZKCZ5kCvVHT68nyn9
வருகின்ற ஞாயிற்றுக் கிழமை இந்திய இலங்கை நேரம் மாலை 6 மணிக்கு குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டல் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் உங்கள் கருத்துக்களைப் பகிர அழைக்கின்றோம்.
தங்கள் மழலையருக்கு தூய தமிழ்ப்பெயர் சூட்டிய பெற்றோரா நீங்கள்? அல்லது தமிழ் மேல் ஈர்ப்பு இருப்பினும் தங்கள் மழலையருக்கு தமிழில் பெயர் சூட்ட முடியாத காரணங்களை எதிகொண்டவரா நீங்கள்?

Topic: தமிழ்ப் பெயர் சூட்டல்
Time: Jul 11, 2021 06:00 PM India
நிகழ்ச்சியின் யூடியூப் காணொளி
— https://youtu.be/vF-XGs1lP6A
Meeting ID: 830 1742 0383
Passcode: Tamil
நமது சூழலில் நமக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்கள் தமிழ் மொழி அல்லாது பிற மொழி அடிப்படையிலும் சில வேளைகளில் பொருள் இல்லாத வகையிலும் அமைகின்றன. குழந்தைகளுக்கு நாம் பெயர் சூட்டும் போது எத்தகைய ஆர்வம் அல்லது மனநிலை நமக்கு ஏற்படுகிறது? பெயர் தேர்ந்தெடுத்தலில் எவையெல்லாம் காரணங்களாக அமைகின்றன என்பதை நீங்கள் மனதில் வைத்திருப்பீர்கள். அதனை வெளிப்படையாக உரையாட இது ஒரு நல்ல வாய்ப்பு… தயாராகுங்கள் தோழர்களே…
இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள இப்போதே உங்கள் காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
தமிழால் இணைவோம்.