Home Events ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியகத்தில் ‘அகம் புறம்’ தமிழ்ப் பண்பாட்டுக் கண்காட்சி 

ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியகத்தில் ‘அகம் புறம்’ தமிழ்ப் பண்பாட்டுக் கண்காட்சி 

by admin
0 comment

ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் நகரில் நாளை தொடங்க இருக்கின்ற அகம் புறம் 6 மாத கால கண்காட்சி நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் மாண்புமிகு அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள், தமிழக அரசின் பண்பாடு அருங்காட்சியகம் மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் டாக்டர் சந்திரமோகன் அவர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திரு கௌதம சன்னா அவர்கள் ஆகியோரை இன்று காலை ஃப்ராங்க்பர்ட் விமான நிலையத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை மற்றும் ஜெர்மனி தமிழ்ச் சங்க நண்பர்கள் வரவேற்ற போது..(அக்டோபர் 6, 2022)


ஜெர்மனி கெல்டன் அருங்காட்சியகம்.இங்கு நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட செல்டிக் மன்னன் ஒருவரது எலும்புக்கூடு, அத்தோடு புதைக்கப்பட்ட அவனது தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட தேர் படுக்கை மற்றும் பல்வேறு பொருட்கள்… இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்களையும் அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்களும் தமிழக அரசின் செயலர் சந்திரமோகன் அவர்களும் பார்வையிட்டனர்…(அக்டோபர் 6, 2022)


ஜெர்மனி டூபிங்கன் பல்கலைக்கழகத்தில் மாலையில் மானிடவியல் துறையில் ஒரு சந்திப்பு.ஜெர்மனியின் மிகப் பழமை வாய்ந்த இந்தப் பல்கலைக்கழகத்தின் அருங்காட்சியகம் சிறப்பு வாய்ந்தது. ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் தொடர்ச்சியாக அகழாய்வுகளைச் செய்து வருகின்றது இந்த டூபிங்கன் பல்கலைக்கழகம்.அமைச்சர் மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு அவர்களும் தமிழக அரசின் பண்பாடு அருங்காட்சிகள் மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் டாக்டர் சந்திரமோகன் ஐஏஎஸ் அவர்களும் நாங்களும் வந்தபோது துறையினர் வாசலுக்கு வந்து வரவேற்று எங்களை அழைத்துச் சென்றனர்.அத்தகைய நோக்கத்தின் தொடக்கமாக நேற்று இந்தப் புகழ்மிக்க பல்கலைக்கழகத்தில் சில பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டன.அதனை ஒருங்கிணைத்த பெருமை நமது தமிழ் மரபு அறக்கட்டளைக்கு உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.ஐரோப்பாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் குறிப்பாக மானுடவியல் ஆசியவியல் துறைகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆய்வுகளைத் தொடங்க வேண்டிய அவசியம் உள்ளது.அத்தகைய நோக்கத்தின் தொடக்கமாக நேற்று இந்தப் புகழ்மிக்க பல்கலைக்கழகத்தில் சில பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டன.அதனை ஒருங்கிணைத்த பெருமை நமது தமிழ் மரபு அறக்கட்டளைக்கு உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்….(அக்டோபர் 6, 2022)


முனைவர் க சுபாஷிணி

தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

You may also like