Home THFi News பேரூர் தமிழ்க்கல்லூரிக்கு தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல்கள் அன்பளிப்பு  

பேரூர் தமிழ்க்கல்லூரிக்கு தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல்கள் அன்பளிப்பு  

by admin
0 comment

பேரூர் தமிழ்க்கல்லூரிக்கு தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல்கள் அன்பளிப்பு

பேரூரில் இயங்கும் பேரூர் சைவ மடத்தின் பேரூர் தமிழ்க்கல்லூரிக்கு தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடுகள் 16 நூல்களை அன்பளிப்பாக அனுப்பியுள்ளோம். இவை இன்று பேரூர் தமிழ்க்கல்லூரி நூலகத்தை அடைந்துவிட்டதாகச் செய்தி கிட்டியது. இந்தக் கல்லூரி நூலகத்துக்கு நூல்கள் தேவைப்படுவதைத் தெரிவித்த நம் குழு உறுப்பினர் ஆசிரியர் திருமிகு ஹேமா அவர்களுக்கும் நூல்களை அனுப்பி வைக்க ஏற்பாடுகளைக் கவனித்த வருண், பாமா ஆகியோருக்கும் எனது பாராட்டுகள்.

பேரூர் தமிழ்க்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடுகள் பயனளிக்கும் என்ற பெரிதும் நம்புகின்றோம்.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

நூல்களை சென்னையில் கீழ்க்காணும் இடங்களில் நேரலும் வாங்கலாம்
டிஸ்கவரி புக் பேலஸ்
ஆழி பதிப்பகம்
எமரால்ட் பதிப்பகம்

நூல்களை இணையம் வழி பெற:

https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation
அல்லது
https://wisdomkart.in/books…/tamil-heritage-foundation/

You may also like