Home Magazine “தமிழ் மரபுத் திணை” இதழ் 1 [ஜனவரி — 2024] காலாண்டிதழ் வெளியீடு

“தமிழ் மரபுத் திணை” இதழ் 1 [ஜனவரி — 2024] காலாண்டிதழ் வெளியீடு

by admin
0 comment

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் — “தமிழ் மரபுத் திணை” இதழ் 1 [ஜனவரி — 2024] காலாண்டிதழ் வெளியீடு

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு வெளியிடும் காலாண்டு மின்னிதழ்…“தமிழ் மரபுத் திணை”.

தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஓர் அங்கமாக நமது “தமிழ் மரபுத் திணை” காலாண்டு மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.

தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளும் ஆய்வுக் கட்டுரைகளும் இதில் தொகுக்கப்படுவதுடன், தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள், நூல்கள், நிகழ்ச்சிகள் ஆகிய பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய வகையிலும் “தமிழ் மரபுத் திணை” காலாண்டிதழில் தொகுக்கப்படுகின்றது.

காலாண்டிதழ் வரிசையில் இதழும் பொதுமக்கள் வாசிப்புக்காக வழக்கம் போல விலையின்றி வழங்கப்படுகின்றது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

https://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2024/02/Tamil-Marabu-Thinai-1.pdf
“தமிழ் மரபுத் திணை” இதழ் 1 [ஜனவரி — 2024]

காலாண்டிதழை இணையம் வழி படிக்க:
தமிழ் மரபு அறக்கட்டளை தளத்தில்
https://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2024/02/Tamil-Marabu-Thinai-1.pdf

ஆசிரியர் : முனைவர் க. சுபாஷிணி
பொறுப்பாசிரியர் : முனைவர் தேமொழி
இணை பொறுப்பாசிரியர் : குமரன் சுப்ரமணியன்

வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர் தேமொழி
செயலாளர்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு


உள்ளடக்கம்
                     
           தலையங்கம்…… 6
1.  தமிழின் தொன்மையை உறுதி செய்யும் சான்றுகள்…… 10
2.  2023 தமிழ் மரபு அறக்கட்டளை சாதனைகள்…… 16
3.  நேஷனல் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி – மணிலா…… 21
4.  11 கல் வழிபாடு…… 25
5.  அசைவ மடையைப் புரிந்துகொள்ளுதல்…… 30
6.  துலுக்கர்பட்டி அகழாய்வு…… 35
7.  மன்னர்கள் நிர்வாகத்தில் கோயில்கள்…… 44
8. யார் இந்த எம்டன்?…… 48
9.  “சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவு”…… 63
10.  முரளி பிராமணாள் கஃபே – வரலாறு அறிவோம்!…… 68
11.  இந்தியாவா? – பாரதமா?…… 75
12.  கண்ணுடையோர் யார்?…… 92
13.  கலைச்சொல் கோயில் கட்டுவோம்!…… 96
14.  ‘பொலிபொலி என்னும் மங்கல ஒலி’…… 103
15.  இலக்கியச்‌ சிந்தனை…… 107
16.  தொல்காப்பியம் கூறும் பழந்தமிழரின் ஆண்டின் தொடக்கம்…… 109
17.  அய்யாவும் மய்யமும்…… 128
18.  இல்லத்தில் தமிழ் இல்லாமலானால்……… 131
19.  ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்பு – நூலறிமுகம்…… 141
20.  ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்— நூல் திறனாய்வு…… 143
21.  காவிரிக் கரையில் திருவையாறு: நூலறிமுகம்…… 151
22. ராஜராஜனின் கொடை:  நூல் மதிப்புரை…… 163
23.  வரலாற்று ஆய்வில் களப்பணிகள்…… 171
24.  திருவள்ளுவர் யார்? – நூல்  அறிமுகம்…… 175
25.  திராவிடப் பண்பாட்டின் கடல் பயணம்…… 185
26.  அரியலூர் அனுபவங்கள்…… 194
27.  நரசிங்கம்பட்டி ஈமக்காடு மற்றும் சித்திர சாவடி ஓவியங்கள்…… 207
28.  Tamil across the oceans…… 212
29.  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு…… 217
    — அக்டோபர்   1, 2023 — டிசம்பர்  31, 2023 நிகழ்வுகள்

““““““““““““““““““““““““““““““““““““““““““““““““

தலையங்கம்

— முனைவர் க. சுபாஷிணி

வணக்கம்.

2024 புத்தாண்டு பிறந்து விட்டது. பல்வேறு வரலாற்றுப் பாதுகாப்பு மற்றும் வரலாற்று விழிப்புணர்வு, கற்றல் நடவடிக்கைகள் என பரந்துபட்ட வகையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகள் 2023 ஆம் ஆண்டில் மிளிர்ந்தன.

உலகளாவிய தமிழ் மக்கள் பயன்பெறும் வகையில் இணையவழி கருத்தரங்கங்கள் இணைய வழி ஆய்வுரைகள் தொடர்ச்சியாகக் கடந்த ஆண்டில் நிகழ்ந்தன. இவை வரலாறு, தொல்லியல், அருங்காட்சியகம், சமூகவியல், மானிடவியல், பெண்கள் நலன், பத்திரிக்கைத் துறை, தமிழுக்குப் பங்காற்றிய முக்கிய ஆளுமைகள் என்ற வகையில் பறந்து பட்ட தலைப்புகளில் ஆய்வுரைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உலகத் தமிழ் மக்கள் பயன்பெறும் வகையில் அவை நிகழ்த்தப்பட்டன.

 வழக்கமான பணிகளில் ஒன்றான கல்வெட்டு பயிற்சி 2023 ஆம் ஆண்டிலும் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மரபு பயணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைப்பது போல கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மரபணுவியல் ஆய்வுகள் தொடர்பான ஒரு கருத்தரங்கையும் தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்து நிகழ்த்தி இருந்தோம்.

தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் கடந்த ஆண்டில் யாழ்ப்பாணம் சென்று வந்தோம். அங்கு மட்டுமின்றி கிழக்கு மாகாண தலைநகரான திருகோணமலை சென்று அப்பகுதியின் வரலாற்றுத் தகவல்களைச் சேகரித்துப் பதியும் பணியைத் தொடங்கினோம். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு முதல் வாரத்திலேயே கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அங்கு மக்களின் தாய்வழிச் சமூக பண்பாட்டுக் கூறுகளை ஆய்ந்து பதிந்ததோடு, வேடர் குல மக்களின் வாழ்க்கை நிலை பற்றிய தகவல்களையும் சேகரித்து வர முடிந்தது. இது நமது தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கை மரபுரிமை வலைப்பக்கத்தில் சேர்க்கப்பட்டுப் பாதுகாக்கப்படும்.

தமிழ்நாடு அரசின் உலகத் தமிழர்களுக்கான நிகழ்ச்சியான அயலகத் தமிழர் நாள் விழா ஜனவரி 11, 12 ஆகிய இரு நாட்கள் சிறப்பாக நடந்தேறியது. ஏறக்குறைய 60 நாடுகளிலிருந்து பங்கேற்பாளர்கள் பங்கு கொண்ட மாபெரும் ஒரு நிகழ்ச்சியாக இது நடந்தேறியது. இந்த நிகழ்ச்சியிலும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பங்களிப்புகள் இடம்பெற்றன. உலகத் தமிழர்களிடையே தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பாதுகாப்பு மற்றும் ஆய்வு தொடர்பான செய்திகளைக் கொண்டு சேர்க்கும் வகையிலான முயற்சியாகவும் இது அமைந்தது.

இந்த அத்தனை பணிகளுக்கும் ஈடு கொடுக்கும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பகப் பிரிவு ஆய்வு நூல்களைக் கடந்த ஆண்டிலும் வெளியீடு செய்தது. இவ்வாண்டின் தொடக்கத்திலும் சில புதிய ஆய்வு நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன; மேலும் சில வெளிவரக் காத்திருக்கின்றன.

வரலாற்றுத் தகவல்களைக் கற்றல் என்பது ஒரே நாளில் அடையக்கூடிய ஒரு சாகசம் அல்ல; மாறாகத் தொடர்ச்சியாகப் பயிற்சிகளை மேற்கொள்வதும், உரைகளைக் கேட்டு அறிவதும், நூல்களை வாசிப்பதும் போன்ற செயல்பாடுகள் ஆரோக்கியமான வரலாற்றுக் கற்றலுக்கு உதவக்கூடியவை. இதனைக் கருத்தில் கொண்டு உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழ் மக்களும் தமிழ் மொழி மற்றும் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பைத் தொடர்பு கொள்ளலாம். இந்த அமைப்பு வழங்குகின்ற எல்லா நடவடிக்கைகளிலும் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஏற்பாடு செய்து நிகழ்த்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உலகத் தமிழர்கள் கைகோர்த்துச் செயல்படலாம். இணைந்து செயல்படுவோம் வாரீர்.

தமிழால் இணைவோம்!

அன்புடன்
முனைவர் க சுபாஷினி
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

காலாண்டிதழை இணையம் வழி படிக்க:
தமிழ் மரபு அறக்கட்டளை தளத்தில்

https://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2024/02/Tamil-Marabu-Thinai-1.pdf
“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““

இதுவரை வெளியான தமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டு மின்னிதழ்கள் யாவும்
ஆர்கைவ் தளத்தில் இங்கே
https://archive.org/details/@thf-quarterly


You may also like