மண்ணின் குரல்: ஜூன் 2019 – மன்னர்களின் செய்திகளை ஆராய்வது மட்டும் தான் வரலாறா?

வரலாற்று ஆய்வு என்பது மன்னர்களின், பேரரசுகளின் வெற்றிகளையும், அவர்கள் பற்றிய நிகழ்வுகளைப் பற்றிய ஆய்வு என்பது மட்டுமே என்ற எண்ணம் பெரும்பாலும் மக்கள் மனதில் நிலைத்துவிட்டது. ஒரு நாட்டின் மக்கள் தொகையில் மிகப் பெரும்பங்கு வகிக்கும் சாதாரண மக்களின் வாழ்க்கை நிலை, சமகால நிகழ்வுகள், குடிகளின் விவசாய மற்றும் தொழில் செயற்பாடுகள், சடங்குகள் வழிபாடுகள், பிற இனங்களின் வருகை, அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் என்பவை எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆராயப்படுகின்றன என்பது நம் முன்னே நிற்கும் கேள்விகள்.
சமூக விஞ்ஞானி பேராசிரியர்.ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். “ஆராய்ச்சி” காலாண்டிதழின் ஆசிரியர். தோழர் நா.வானமாமலை அவர்களின் சிந்தனை மரபினர். சமூகவியல் மானுடவியல் பார்வையில் களப்பணிகளின் வழியாக தமது ஆய்வினை நிகழ்த்தி குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நூல்களைத் தமிழ் ஆய்வுலகிற்கு வழங்கிய அறிஞர்.
இவருடனான தமிழ் மரபு அறக்கட்டளையின் நேர்க்காணலில்
  • சமூகவியல் ஆய்வுகள்
  • அடித்தள மக்களின் வரலாற்று ஆய்வு
  • தமிழகத்தில் சாதி
  • தமிழகத்துக்கு ஐரோப்பியர் வருகை
  • திருநெல்வேலியில் பாதிரியார் ரெய்னுஸ் அவர்களின் சமூகச் செயல்பாடு
  • தமிழகத்தில் கிருத்துவ மதத்தில் ஏற்பட்ட சாதிப்பாகுபாடு
  • மாடவீதியின் பின்னனி
  • மன்னர்களின் வரலாறு சொல்லும் செய்திகள்
எனப் பல கோணங்களில் தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
விழியப் பதிவு உதவி: திரு.செல்வம் ராமசாமி, ( THFi மதுரை)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி ( THFi கலிபோர்னியா)

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *