Home THFi News இடர்கால நிதி நல்கை

இடர்கால நிதி நல்கை

by admin
0 comment
தமிழ்மரபு அறக்கட்டளைசார்பில்
கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
https://youtu.be/qNlHDw71CmA

அனைவருக்கும் வணக்கம்.

பாரம்பரிய மரபுக் கலைஞர்களுக்காக முரசு கலைக் குழுவும், மனிதநேயம் அனைத்து வகை மாற்றுத்திறனாளி நலவாழ்வு சங்கம் சார்பாகவும் நமது தமிழ்மரபு அறக்கட்டளையிடம் இடர்கால நிதி உதவி வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது. இதை நமது உறுப்பினர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்த பொழுது தங்களால் இயன்ற நிதியை அனுப்பி வைத்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் மனம் கனிந்த நன்றியை தமிழ்மரபு அறக்கட்டளை செயற்குழுவினர் தெரிவித்துக் கொள்கிறோம்.

நீங்கள் அனுப்பிய பொருளுதவி தக்கோரிடம் சேர்ப்பிக்கப்பட்டது.
ரூ 13,500 – முரசு கலைக் குழு, நாகர்கோவில், தமிழ்நாடு அமைப்பிற்காக ஞா. அருள் செல்வி (9488957045) அவர்களுக்கும்
ரூ 13,500 – மனிதநேயம் அனைத்து வகை மாற்றுத்திறனாளி நலவாழ்வு சங்கம் அமைப்பிற்காக திரு. மாரியப்பன் (9444744218) அவர்களுக்கும் அனுப்பப்பட்டது.

அடுத்தவர் துயர் துடைக்க என்றும் தங்களால் இயன்ற வகைகளில் பங்குபெறும் தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களே நமது பெரும் பலம்.

தமிழ்மரபு அறக்கட்டளை சார்பில் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி:
25-06-2021 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:00 மணியளவில்; மனிதநேயம் அனைத்து வகை  மாற்றுத்திறனாளி நலவாழ்வு சங்கம் அமைப்பின் மூலம்  செங்கல்பட்டு மாவட்டம், மாங்காடு வட்டம், குன்றத்தூர் பகுதியில் வசிக்கும் 25க்கும் மேலான மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.

தமிழ்மரபு அறக்கட்டளை சார்பில் –
கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
https://youtu.be/qNlHDw71CmA

ஐந்து கிலோ அரிசியும், இரண்டு கிலோ கோதுமை மாவும், மேலும் சமையலுக்குத்தேவையான சில மளிகைப் பொருட்களும் அடங்கிய பொட்டலங்கள் வழங்கப்பட்டன.  ஏற்பாடு செய்த நண்பர்களுக்கும், பொருளுதவி நல்கிய தமிழ் மரபு அறக்கட்டளை தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி.  

பேரிடர்க் காலத்தில் தமிழ் மரபு கலைஞர்களின் கரம் பற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி. முன் முயற்சி எடுத்து நிதி ஒழுங்கமைவு செய்த தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் முரசின் பறை வாழ்த்துக்கள்…முரசு கலைக்குழுவினர்

மீண்டும் அனைவருக்கும் நன்றி.

தமிழ் மரபு அறக்கட்டளை செயற்குழு

You may also like

Leave a Comment