Home Events தமிழி கல்வெட்டு எழுத்துப் பயிலரங்கம் – அக்டோபர் 29, 2022

தமிழி கல்வெட்டு எழுத்துப் பயிலரங்கம் – அக்டோபர் 29, 2022

by admin
0 comment

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி மாலை இணைய வழியாக நடத்திய தமிழி கல்வெட்டு பயிற்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

பயிற்சி மேற்கொண்டவர்களில் ஐந்து கல்லூரி மாணவர்களுக்கு இப்பயிற்சியில் இலவசமாக நுழைவு அளிக்கப்பட்டது. முதலில் தமிழி எழுத்து எழுதவும் வாசிக்கவும் பயிற்சி நடைபெற்றது. அதன் பின்னர் பல்வேறு கல்வெட்டுகள் பற்றி குந்தவை நாச்சியார் கல்லூரி இணைப் பேராசிரியர் முனைவர் சிவராமகிருஷ்ணன் விளக்கமளித்தார்.

தமிழி கல்வெட்டுப் பயிற்சி பயிலரங்கைத் திறம்பட நடத்திய டாக்டர் பாமா தலைமையிலான குழுவிற்கு குறிப்பாக திரு மணிவண்ணன், திரு நாணா ஆகியோருக்கும், என்னோடு இணைந்து இப்பயிற்சியைச் சிறப்பாக அளித்த இணைப் பேராசிரியர் டாக்டர் சிவராமகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது நன்றியும் அன்பும் நல்வாழ்த்துக்களும்.

பங்கு பெற்று பயன் பெற்ற அனைவருக்கும் எங்களது நல்வாழ்த்துக்கள்.
வரலாற்றை முறையாக அறிந்து கொள்ள நூல்களை வாசிப்போம்; கல்வெட்டு பயிற்சிகளையும், மரபு பயணங்களையும் மேற்கொள்வோம்.

முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
.

அறிவிப்பு

அக்டோபர் மாதம் 29ஆம் தேதி இணைய வழியாக தமிழி கல்வெட்டு பயிற்சி நடைபெற உள்ளது. வீட்டில் இருந்தபடியே வரலாற்றில் பயிற்சி மேற்கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பாகும். தவற விடாதீர்கள்.பயிற்சியை மேற்கொள்ள விரும்புபவர்கள் கொடுக்கப்பட்டுள்ள கூகுள் லிங்க் பாரத்தை பூர்த்தி செய்து உங்கள் பெயர்களைப் பதிந்து கொள்க.

முன்பதிவு :https://forms.gle/hXSKLxhUGjXJbKjN6

ஒரு வகுப்பில் 90 பேர் மட்டுமே பங்கு பெற முடியும் என்பதால் விரைந்து உங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்க.

 இந்த பயிலரங்கத்தில் தமிழி எழுத்துக்களை அறிமுகம் செய்து, தமிழி மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகளை வாசிக்க பயிற்சியும் தரப்படும். 

இந்த பயிலரங்கதிற்கான பயிற்சிக் கட்டணம் : INR 500* / EURO 10 / USD 10
*இந்திய / இலங்கை மாணவர்கள் சலுகைக் கட்டணம் INR 200

பணம் செலுத்தும் முறை:
Payment Details: (within India)
Tamil Heritage Foundation International
Account No: 1196050014474
IFSC: PUNB0119620
Bank: Punjab National Bank
Branch: Nungambakkam, Chennai

Payment Details: (Outside India)
Tamil Heritage Foundation International
e. V. Account No: DE38 6035 0130 0001 1038 10
Swift-BIC: BBKRDE6BXXX
Bank: Kreissparkasse Boeblingen

நன்றி
ஏற்பாட்டுக்  குழு,
தமிழி கல்வெட்டு எழுத்து (ம) வாசிப்பு பயிலரங்கம்,
கடிகை முதன்மைநிலை கல்விக்கழகம்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

You may also like