
THFi Announcement – E-books update: தேவேந்திரன்
https://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/12/Deventhiran-Rajeswari.pdf
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் … முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D., அவர்களின் “தேவேந்திரன் ” என்ற அவரது “சமூகப்பண்பாட்டு ஆய்வு நூல்” வரிசையின் மூன்றாம் நூல் மின்னூலாக இணைகின்றது.
நூல் குறிப்பு:
தேவேந்திரன்
சமூகப் பண்பாட்டு ஆய்வு நூல் வரிசை – 3
ஆசிரியர்: முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D.,
பதிப்பாண்டு: 2020
வெளியீடு: சந்திரோதயம் பதிப்பகம், மதுரை
முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D., மொழிபெயர்ப்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சமூகப்பண்பாட்டு ஆய்வு நூலாகப் படைக்கப்பட்டுள்ள இந்த நூல், இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல் வரிசையில் இணைகிறது.
நூலின் உள்ளடக்கம்:
- தேவேந்திரன் கருத்தும் கதைகளும்
- தமிழ்நாட்டிலும் ஜப்பானிலும் இந்திரன் வழிபாடு
- இந்திர வழிபாடும் வேளாண் சமூகமும்
இந்த நூல், வேதகால இந்திரன் வேறு, தமிழகத்தில் மருதநிலக் கடவுளான வேந்தனான தேவேந்திரன் வேறு என்பதைப் பல ஒப்பீட்டுக் கருத்துகளின் வழி விளக்கும் நூல்.
தனது நூலைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்திற்கு வழங்கிய முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D.,
அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றிகள் உரித்தாகிறது.நூல் ஆக்கம், மின்னூல் உருவாக்க உதவி: முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D.,
நூலை வாசிக்க – தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்தில் இங்கே செல்க:
https://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/12/Deventhiran-Rajeswari.pdf
நன்றி.
அன்புடன்
தேமொழி
தமிழ் மரபு அறக்கட்டளை
[www.tamilheritage.org]