தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் மின்னூல் வெளியீடு:
“”அமராவதியின் காதல்””[சிறுகதைகள் தொகுப்பு]
https://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/12/Amaravathi-Short-Stories-Rajeswari.pdf
வணக்கம்.தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று … முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D., அவர்கள் ‘சத்யபிரபா’ என்ற புனைபெயரில் எழுதியுள்ள, அவரது அமராவதியின் காதல் [சிறுகதைகள் தொகுப்பு] என்ற நூல் மின்னூலாக இணைகின்றது.
நூலாசிரியர் முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D., மொழிபெயர்ப்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். “நவீன தகவல் தொழில்நுட்ப உலகமயமாக்கப்பட்ட என்று என்னவெல்லாமோ சொல்லப்பட்டு வருகிற சூழலில் காதல் மட்டும் மாறாது, தன்னிடத்தை எதற்காகவும் விட்டுக் கொடுக்காது இருப்பதைச் சுட்டுவதுதான் அமராவதியின் காதல் ……” என்று தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஆ. பாப்பா அவர்கள் நூல் குறித்த பாராட்டுரையில் கூறியுள்ளார்.
தனது நூலைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்திற்கு வழங்கிய முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D., அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றிகள் உரித்தாகிறது.நூல் ஆக்கம், மின்னூல் உருவாக்க உதவி: முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D.,
நூலை வாசிக்க – தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்தில்
இங்கே செல்க:
https://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/12/Amaravathi-Short-Stories-Rajeswari.pdf
நன்றி.
அன்புடன்
தேமொழி
தமிழ் மரபு அறக்கட்டளை